சுடச்சுட

    

    ராசிபுரம் ஸ்ரீ வித்யாபாரதி மாடர்ன் பள்ளியில் பொங்கல் விழா, விளையாட்டு விழா, பெற்றோர் தினம் போன்ற முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

    விழாவில் பள்ளித் தலைவர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் ராசிபுரம் டிஎஸ்பி வி.ராஜு பங்கேற்று, ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்தார். இதில், பள்ளிச் செயலர் ஆர்.ஹரிகிருஷ்ணன், பொருளாளர் ச.கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அதேபோல, பொங்கல் விழாவில் பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்று, பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர், பெற்றோர்களுக்கிடையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், எஸ்ஆர்வி ஹைடெக் பள்ளி செயலர் எஸ்.செல்வராஜன் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    நாமகிரிப்பேட்டையில் ஜன.19-இல் மின் தடை

    நாமகிரிப்பேட்டை பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், ஜனவரி 19-இல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என மின் வாரிய உதவிச் செயற்பொறியாளர் மா.வெங்கடாசலம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:

    நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஜனவரி 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிபட்டி, மெட்டலா, ஆயில்பட்டி, காக்காவேரி, அரியாக்கவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம் ஆகிய ஊர்களிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால், மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

    கட்டாய கல்வி உரிமைச் சட்டம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    அனைவருக்கும் கல்வி இயக்கம், மோகனூர் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட வளையப்பட்டி குறுவள மைய ஊர்ப்புற நூலகத்தில், கலைக் குழுவினரின் விழிப்புணர்வு நாடகம் அண்மையில் நடைபெற்றது.

    வளையப்பட்டி ஊராட்சி தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் சாந்தி, நாடகத்தை தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், குழந்தைகளின் சுகாதாரம், தன்சுத்த செயல்பாடுகள், குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் களைதல் குறித்து விளக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai