Enable Javscript for better performance
ஆய்வு செய்த தீவன மூலப்பொருள்களை பயன்படுத்த அறிவுறுத்தல் - Dinamani

சுடச்சுட

    

    ஆய்வு செய்த தீவன மூலப்பொருள்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

    By நாமக்கல்  |   Published on : 18th January 2015 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுவாசப்பாதை நோய்களால் கோழிகள் இறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஆய்வகத்தில் ஆய்வு செய்த பிறகு தீவன மூலப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என கோழிப் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் கால்நடை அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடுத்த நான்கு நாள்களுக்கு வானம் பொதுவாகத் தெளிவாகவும். மழையற்றும் காணப்படும். குறைந்தபட்ச வெப்ப அளவு குறைய வாய்ப்புள்ளதால். பண்ணையாளர்கள் உயர்மனைகளின் பக்கவாட்டில் தொடர்ந்து படுதாவைப் பயன்படுத்தி வருவதன்மூலம் கோழிகளை பனிப் பாதிப்பிலிருந்து காப்பதோடு, தீவனத்தில் எரிசக்தியின் அளவை அதிகப்படுத்தி, அதிகப்படியான தீவன எடுப்பைக் கட்டுப்படுத்தலாம்.

    கோழியின ஆய்வகத்தில் கடந்த வாரம் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும், இறக்கை அழுகல் நோய் மற்றும் சுவாசப் பாதை நோய்களால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதனால் பண்ணையாளர்கள் தீவன முலப்பொருள்களில் கிளாஸ்ட்ரிடியம் கிருமி மாசுபாடு உள்ளனவா என இந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்து அதன்பிறகு பயன்படுத்த வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai