சுடச்சுட

    

    ராசிபுரம் நகர அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் 98-ஆவது பிறந்த தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    அதிமுக நகரச் செயலரும், நகர்மன்றத் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள எம்ஜிஆரின் முழு உருவச் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார், நகர அதிமுக அவைத் தலைவர் வி.திருப்பதி, பொருளர் வி.கே.ஆர்.கே.ராமசாமி, நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் ஆர்.கோபால், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.வெங்கடாஜலம், உறுப்பினர்கள் ஏ.பி.அருணாசலம், லோகநாதன், சீனிவாசன், முருகேசன், ரமேஷ் அமல்ராஜ், மகளிரணி நிர்வாகி ராதா சந்திரசேகரன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ஆர்.எஸ்.ரங்கசாமி, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai