சுடச்சுட

    

    கரும்பு டன்னுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

    நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், திருச்செங்கோட்டில் திங்கள்கிழமை நடந்தது. அவைத் தலைவர் நடனசபாபதி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.காந்திச்செல்வன், மாநிலத் தேர்தல் பணிக்குழுச் செயலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்டச் செயலர் மூர்த்தி வரவேற்றார்.

    திமுக அமைப்புத் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் அன்பழகன், பொருளர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுக்கும், நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு நிர்வாகிகளுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தை முதல் நாளில் கட்சிக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கியும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கவும் ஜனவரி 25-ஆம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தவும் ஜனவரி மாதத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் நடத்தவும் கரும்பு விவசாயிகளுக்கு, டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai