சுடச்சுட

    

    குதிரை ரேக்ளாவுக்குத் தடை:மோகனூர் மக்கள் அதிர்ச்சி

    By நாமக்கல்,  |   Published on : 18th January 2015 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மிருகவதைத் தடை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மோகனூரில் சனிக்கிழமை (ஜன.17) நடைபெற இருந்த குதிரை ரேக்ளா போட்டி நடைபெறவில்லை.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு சங்க காலம் முதல் நடந்து வருகிறது. இது தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

    தமிழர்களின் வீரவிளையாட்டுக்கு எடுத்துக் காட்டாகவும் அடையாளமாகவும் திகழும் ஜல்லிக் கட்டுக்கு கடந்தாண்டு, மிருகவதைத் தடை சட்டத்தின் கீழும் அதன் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியல் பிரிவின் அடிப்படையிலும் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.

    பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக் கட்டுதான் நினைவுக்கு வரும். அத்தகைய வீர விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில், அதே சட்டத்தின் கீழ் ஆங்காங்கே நடக்கும் குதிரை ரேக்ளா போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதன் ஒரு பகுதியாக, குதிரை ரேக்ளாப் போட்டியும் நடத்தப்படும். அதில், திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த

    குதிரைகள் பங்கேற்கும்.

    இந்தாண்டும் பொங்கல் விழாக்குழு சார்பில் குதிரை ரேக்ளா போட்டிக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் மிருகவதைத் தடை சட்டத்தின் கீழ் குதிரை ரேக்ளா போட்டிக்கு அனுமதி மறுத்து போலீஸார் தடை விதித்ததால், போட்டிகள் நடைபெறவில்லை. இது விழா ஏற்பாட்டாளர்கள், விளையாட்டு ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai