Enable Javscript for better performance
குமாரபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம் - Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்

    By குமாரபாளையம்,  |   Published on : 18th January 2015 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையத்தில் அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

    குமாரபாளையம் நகர அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு நகரச் செயலர் ஏ.கே.நாகராஜன் தலைமை வகித்தார். ஊர்வலமாகச் சென்ற அதிமுகவினர் பேருந்து நிலையம் அருகே

    எம்ஜிஆரின் அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன், நகர துணைச் செயலர் ஏ.ஜி.என்.திருநாவுக்கரசு, மாவட்ட அதிமுக நிர்வாகி எஸ்.என்.பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் சேகர், அறிவழகன், ஆட்டோ மற்றும் குதிரைவண்டி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம்.வெங்கடேசன், நகர மகளிரணிச் செயலர் பச்சியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் தலைமையில் அதிமுகவினர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றதோடு, நகராட்சி அலுவலகம் அருகே அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர்மன்றத் துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, உறுப்பினர்கள் பி.முருகேசன், கே.ஆர்.பாஸ்கரன், செல்வராஜ், கோபாலகிருஷ்ணன், பத்மா மகாலிங்கம், அவைத் தலைவர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் சி.ரவி, சி.ஜி.அர்ஜூனன், நிர்வாகிகள் விஜயலட்சுமிஸ்ரீ, மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai