சுடச்சுட

    

    தமிழர் தேசிய முன்னணி சார்பில் துண்டுப் பிரசுரம்

    By ராசிபுரம்  |   Published on : 18th January 2015 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழர் தேசிய முன்னணி சார்பில் வரும் 25- ஆம் தேதி மதுரையில் நடைபெறும் தமிழர் தேசிய எழுச்சி மாநாடு குறித்த விளக்க துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.

    முல்லைப் பெரியாறு, காவிரி, இலங்கைத் தமிழர், கச்சத்தீவு பிரச்னை, கூடங்குளம், மீத்தேன் வாயு பிரச்னை குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு குறித்த மாநாடு பழ.நெடுமாறன் தலைமையில் மதுரையில் நடைபெறுகிறது.

    இம்மாநாடு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் துண்டுப் பிரசுரம் வழங்கும் விழா நாமக்கல் மாவட்ட தமிழர் தேசிய முன்னணி சார்பில் ராசிபுரத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் பி.தட்சிணாமூர்த்தி தலைமையில் பல்வேறு பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai