சுடச்சுட

    

    மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு

    By நாமக்கல்  |   Published on : 18th January 2015 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அண்மையில் ஆய்வு செய்தார்.

    நாகர்பாளையம், மரப்பாறை, குப்பிச்சிபாளையம், பருத்திப்பள்ளி, கொளங்கொண்டை கருமனூர் ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை மேம்பாடு, குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட ரூ.49.14 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் ராஜராஜேஸ்வரி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் வெங்கடாசலம், திலகவதி, பொறியாளர்கள் கெளரி, சாந்தாராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai