சுடச்சுட

    

    மாடு பூத்தாண்டும் போட்டி: பொதுமக்கள் குவிந்தனர்

    By பரமத்திவேலூர்,  |   Published on : 18th January 2015 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலகவுண்டம்பட்டி அருகே மாடு பூத்தாண்டும் போட்டி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வேலகவுண்டம்பட்டி தட்டாம்பாளையம் வீரக்காரன் கோயிலில் ஒவ்வோராண்டும் காணும் பொங்கல் தினத்தன்று மாடுகள் பூத்தாண்டும் போட்டி நடைபெறும். இந்த ஆண்டும் மாடுகள் பூத்தாண்டும் போட்டி நடைபெற்றது. இதில் வடக்குப்பட்டி, மஞ்சநாயக்கனூர், சுப்பையநாயக்கனூர், தட்டாம்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த கோயில் மாடுகள் கலந்து கொண்டன.

    வீரக்காரன் கோயில் வளாகத்தில் இருந்து கோயில் முன் வரை உள்ள தூரத்தை மூன்று முறை ஓடிக் கடக்க வேண்டும். இதில் மூன்றாவது முறை முதலாவதாக வரும் கோயில் மாட்டிற்கு பரிவட்டம் கட்டப்பட்டு, பட்டம் சூட்டப்படும்.

    சுப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கோயில் மாடு, பூக்களால் அமைக்கப்பட்டிருந்த எல்லைக் கோட்டைக் கடந்து முதலாவதாக வந்தது. அந்த மாட்டிற்கு பெரியோர்களால் பரிவட்டம் கட்டப்பட்டு பட்டம் சூட்டப்பட்டது.

    சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மாடு பூத்தாண்டும் போட்டியைக் கண்டு ரசித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai