Enable Javscript for better performance
ராசிபுரத்தில் கத்தி போடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் மேட்டுத்தெரு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் விழாவைத் தொடர்ந்து வீரகுமாரர்களின் கத்தி போடும் விழா

    அண்மையில் நடைபெற்றது.

    இக்கோயிலில் பெருவிழா முகூர்த்தக்கால் நடுதல், கொடியேற்றத்துடன் ஜன.15-ல் தொடங்கியது. இதையடுத்து கணபதி ஹோமம், அம்மன் கொழு மண்டபத்தில் எழுந்தருளுதல், பட்டணம் ரோடு அரச மரபிள்ளையார் கோயிலில் இருந்து அம்மன் சக்தி அழைத்து, மாரியம்மன் கோயிலுக்கு வருதல் போன்றவை நடைபெற்றன.

    சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மஞ்சள் ஆடை அணிந்து பிரதான சாலைகள் வழியாக கத்தி போட்டவாறு அலகு சேவை நிகழ்ச்சியை நடத்தினர்.

    ஜன.16-ல் செளடேஸ்வரி அம்மனுக்கு மகா தளிகை பூஜை, சாமுண்டி அழைத்தல் போன்றவை நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai