சுடச்சுட

  

  ராசிபுரம் கல்லூரியில் வளாகத் தேர்வு: 16 பேருக்கு பணி நியமன ஆணை

  Published on : 18th January 2015 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் ஞானமணி கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வில் தேர்வு பெற்ற 16 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

  க்ளென்உட் சிஸ்டம்ஸ் நிறுவனம் சார்பில், ராசிபுரம் ஞானமணி கல்லூரியில் வளாகத் தேர்வு அண்மையில் நடைபெற்றது.

  இதை முன்னிட்டு நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி நிறுவனர் தலைவர் தி.அரங்கண்ணல் தலைமை வகித்தார். தாளாளர் ப.மாலாலீனா குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். தொழில்நுட்ப வேலைவாய்ப்புத் துறை அலுவலர் பிரபு வரவேற்றார். முதன்மைச் செயல் அலுவலர் கே.விவேகானந்தன், நிர்வாக அலுவலர் பி.பிரேம்குமார், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சஞ்சய்காந்தி, பொறியியல் கல்லூரி முதல்வர் அசோக் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  சிறப்பு விருந்தினராக க்ளென்உட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி ஆனந்த் பங்கேற்றுப் பேசினார்.

  தொடர்ந்து நடைபெற்ற வளாகத் தேர்வில், நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்

  கேற்றனர்.

  எழுத்துத் தேர்வில் 149 மாணவர்களும், குழு விவாதச் சுற்றில் 60 மாணவர்களும், நேர்முகத் தேர்வில் 30 மாணவர்களும், இறுதிச் சுற்றில் 16 பேரும் வெற்றி பெற்றனர்.

  வளாகத் தேர்வில் தேர்வான 16 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai