சுடச்சுட

    

    எலந்தகுட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

    By நாமக்கல்,  |   Published on : 19th January 2015 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிபாளையம் அருகே எலந்தகுட்டை ஸ்ரீ பொன்காளியம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

    துவக்க விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ஈரோடு எம்பி செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார். நெல் கொள்முதல் பணியை தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்துப் பேசியது:

    தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலமாக ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரையில் கடந்த ஆண்டு திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தின்கீழ் சுமார் 9,116 ஹெக்டேரில் நெல் பயிடப்

    பட்டது.

    விவசாயிகள் இடைத்தரகர் மூலம் குறைந்த விலைக்கு தனிநபரிடம் விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நெல் கொள்முதல்

    செய்கிறது.

    விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து வருகிறது. அதன்படி இங்கு தொடங்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து பயனடையலாம்.

    இங்கு குறைந்தபட்ச ஆதார விலையாக நெல் கிரேடு ஏ-க்கு ரூ.1,400, ஊக்கத்தொகை ரூ.70 என மொத்தம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1470, நெல் பொதுரகத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,360, ஊக்கத்தொகை ரூ.50 என மொத்தம் ரூ.1,410 வழங்கப்படுகிறது என்றார்.

    திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் சுமன், வேளாண் இணை இயக்குநர் லோகநாதபிரகாசம், பள்ளிபாளையம் நகர்மன்றத்தலைவர் வெள்ளியங்கிரி, ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் செந்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai