சுடச்சுட

    

    ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அதிமுகவினர் வழிபாடு

    By குமாரபாளையம்  |   Published on : 19th January 2015 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்க வேண்டி நாமக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் குமாரபாளையம் பாண்டுரங்கர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    இவ்வழிபாட்டுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் சந்திரசேகர், அதிமுக நகரச் செயலர் ஏ.கே.நாகராஜன் முன்னிலை வகித்தனர். நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் சி.ஜி.அர்ச்சுனன் வரவேற்றார். பாண்டுரங்கருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    நகர்மன்றத் துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி, அதிமுக நகரத் துணைச் செயலர் ஏஜிஎன்.திருநாவுக்கரசு, அதிமுக நிர்வாகிகள் எஸ்.என்.பழனிச்சாமி, சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai