சுடச்சுட

    

    திமுக சார்பில் பொங்கல்விளையாட்டுப் போட்டிகள்

    By ராசிபுரம்  |   Published on : 19th January 2015 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் ஒன்றிய திமுக சார்பில் பட்டணம் பேரூராட்சிக்கு உள்பட்ட குச்சிக்காடு கிராமத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

    தொடக்க விழாவில் ராசிபுரம் திமுக ஒன்றியச் செயலர் கே.பி.ஜெகந்நாதன் வரவேற்றார். திமுக மாவட்டச் செயலர் எஸ்.காந்திசெல்வன், போட்டிகளைத் தொடக்கி வைத்துப் பார்வையிட்டார். இதில் கயிறு இழுத்தல், கபடி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலப்போட்டி, இசை நாற்காலி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பட்டணம் பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.நல்லதம்பி, மாவட்ட திமுக பொருளர் கே.செல்வம், ஒன்றிய துணைச்செயலர் சிவக்குமார், பொருளர் எஸ்.முத்துசெல்வன், மாவட்டப் பிரதிநிதிகள் வி.பாலமுருகன், குணசேகரன், மா.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூனவேலம்பட்டிபுதூர் பகுதியில் ஊர் பொதுமக்கள் சார்பாக கயிறு இழுத்தல், உறி அடித்தல், ஓட்டப்பந்தயம், முறுக்குக் கடித்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன. இதில் சிறுவர்கள் ஏராளமானாúôர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai