Enable Javscript for better performance
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் - Dinamani

சுடச்சுட

    

    தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai