சுடச்சுட

  

  பள்ளி மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) நடக்கவிருந்த திருமணத்தை வருவாய்த் துறையினர் தடுத்துநிறுத்தினர்.

  நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே வானக்காரன்புதூரைச் சேர்ந்த 15 வயதான 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கும், ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

  இந்நிலையில், சனிக்கிழமை மாலை மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு, குழந்தைத் திருமணம் நடப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சைல்டு லைன் அமைப்பு நிர்வாகிகள் தினேஷ், கோமதி, வானக்காரன்புதூர் கிராம நிர்வாக அதிகாரி பிரபா மற்றும் புதுச்சத்திரம் போலீஸார் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில், பெண்ணுக்கு திருமண வயது எட்டவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும், இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு, சிறுமியை குழந்தைகள் நலக்குழுமம் முன்னிலையில் வரும் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்த வேண்டும் என பெற்றோருக்கு அறிவுறுத்தினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai