சுடச்சுட

    

    பாண்டமங்கலம் வெங்கட்ரமண சுவாமி தேர்த் திருவிழா இன்று தொடக்கம்

    By பரமத்திவேலூர்,  |   Published on : 19th January 2015 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் வட்டம் பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலின் திருத்தேர் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடியேற்றும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    20-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிவரை காலை பல்லக்கு உற்சவமும், இரவு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    27-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4.40 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    28-ஆம் தேதி காலை பல்லக்கு உற்சவமும், மாலை 3 மணிக்கு வராக புஷ்கரணியில் தீர்த்தவாரி சக்கராஸ்நானமும், இரவு கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை காலை திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு வசந்த உற்சவம், புஷ்ப யாகம் மற்றும் கருட உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரா.சாந்தி, தக்கார் முத்துசாமி, விழாக்குழுவினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai