சுடச்சுட

    

    நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை முல்லை நகர் நலச்சங்கம் சார்பில் 5-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பரிசளிப்பு விழா முல்லை நகர் அறக்கட்டளை தலைவர் பேராசிரியர் உழவன் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் சம்பத் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை தனித்துணை ஆட்சியர் சூரியபிரகாஷ், தொழிலாளர் ஆய்வாளர் மஞ்சள்நாதன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

    நாமக்கல் வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் சுப்பிரமணி, தொழிலதிபர்கள் கோபாலகிருஷ்ணன், தங்கவேல், ராமசாமி, பாரி, சந்திரன், தனசேகர் உள்ளிட்டோர்

    பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai