சுடச்சுட

  

  மின்கட்டணச் சலுகை மானியத்தை முறைப்படுத்த வேண்டும்

  By நாமக்கல்,  |   Published on : 19th January 2015 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறிய விசைத்தறிக் கூடங்களுக்கு மின் கட்டணச் சலுகை, மானியத்தை முறைப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

  கட்சியின் திருச்செங்கோடு நகர மாநாடு எஸ்.ஆர்.சண்முகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் எஸ்.மணிவேல், துணைச் செயலர் பி.தனசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் பேசினர். நகரச் செயலராக ஆர்.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும், 172 துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். பணியாளர் பற்றாக்குறையால் துப்புரவுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க கூடுதல் எண்ணிக்கையில் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

  ஏழை மக்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளைக் குறைந்த வாடகையில் அரங்கு எடுத்து நடத்திக் கொள்ளும் வகையில் நகராட்சி சார்பில் மண்டபம் அல்லது அரங்கம் கட்டிக் கொடுக்க வேண்டும்.

  திருச்செங்கோடு புறநகர் வழியே சுற்று வட்டச்சாலை அமைக்கப்படும் வரை, நகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்துப் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.

  திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டிக் கொடுக்கவும், மருத்துவர், செவிலியர்களை நியமிக்கவும், அங்கு நடைபெறும் லஞ்சம், ஊழலைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

  மோசமான நிலையில் உள்ள திருச்செங்கோடு கைலாசநாதர் கோயில் சாலை சீரமைப்புப் பணியை நகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். பள்ளிபாளையம் சாலையில் உள்ள சந்தைக்கு சுற்றுச்சுவர், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். லாரிப் பட்டறைகள் நிறைந்துள்ள சங்ககிரி சாலையில் நகராட்சி சார்பில் கட்டணக் கழிப்பிடம் மற்றும் குளியலறை கட்டிக்கொடுக்க வேண்டும்.

  திருச்செங்கோடு நகர பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்கவேண்டும். திருச்செங்கோடு பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் மற்றும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். சிறிய விசைத்தறிக் கூடங்களுக்கு மின் கட்டண சலுகை, மானியத்தை முறைப்படுத்த வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai