சுடச்சுட

    

    வழுக்கு மரம் ஏறும் போட்டியில் திருச்செங்கோடு அணி சாம்பியன்

    By நாமக்கல்,  |   Published on : 19th January 2015 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் நல்லிப்பாளையத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு வழுக்குமரம் ஏறும் போட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    நாமக்கல் நல்லிப்பாளையத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கலை முன்னிட்டு வழுக்குமரம் ஏறும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் இதற்காக ஏறத்தாழ 40 அடி உயரம் கொண்ட வழுக்குமரம் நடப்பட்டு இருந்தது. அதில் முழுவதும் கிரீஸ் பூசப்பட்டு இருந்தது.

    திருச்செங்கோடு, பொத்தனூர், கோப்பணம்பாளையம், கோனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12 அணிகள் கலந்து கொண்டன. 3 சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஒரு அணிக்கு 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 4 மற்றும் 5 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

    போட்டியாளர்கள் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு அடி வீதம் மெதுவாக ஏறினர். சிலர் அவ்வப்போது வழுக்கி விழுவதையும் காண முடிந்தது. இரவு 11 மணி வரை நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற திருச்செங்கோடு அணிக்கு, ரூ.33 ஆயிரத்து 333 பரிசு வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai