சுடச்சுட

    

    1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

    By நாமக்கல்  |   Published on : 19th January 2015 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

    பள்ளிபாளையம் நகராட்சிக்குள்பட்ட ஆவாரங்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், திருச்செங்கோடு நகராட்சிக்குள்பட்ட சீத்தாராம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ஈரோடு எம்பி செல்வகுமாரசின்னையன் முன்னிலை வகித்தார். தொழில்துறை அமைச்சர் பி. தங்கமணி, 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கினார். மொத்தம் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

    திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் சுமன், நகர்மன்றத் தலைவர்கள் பொன்.சரஸ்வதி, வெள்ளியங்கிரி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் செந்தில், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai