சுடச்சுட

    

    மதுரையில் சர்வதேச அளவிலான கபடிப் போட்டி வரும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத் தலைவர் சோலை எம்.ராஜா தெரிவித்தார்.

    திருச்செங்கோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: சர்வதேச அளவிலான கபடிப் போட்டி மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. இதில் ஈரான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்தப் போட்டிக்கு தமிழக அரசு

    ரூ.ஒரு கோடி நிதி வழங்கியுள்ளது. இதுவரை கபடிக்கு இந்தியாவில் எந்த அரசும் இவ்வளவு தொகையை வழங்கியது இல்லை. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அம்மா சர்வதேசக் கபடிக் கோப்பை என்ற கோப்பையை அறிமுகப்படுத்த உள்ளோம்.

    தமிழக அரசு கபடி விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை காவல் துறையில் வேலைவாய்ப்பினை வழங்கி வந்தது. தற்போது கூடுதலாக போக்குவரத்துத்துறை, மின்வாரியம் மற்றும் ஆவின் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கிவருகிறது. இதற்காக கபடி வீரர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai