சுடச்சுட

    

    மத்திய அரசைப் போல முழு ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச பணிக்காலம் 20 ஆண்டுகளாக நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் நாமக்கல் அண்ணாசிலை முன் திங்கள்கிழமை காலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, சுப்ரமணியம், கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தேர்தல் நேரத்தில் முதல்வர் அறிவித்தபடி, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசைப் போல முழு ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச பணிக்காலம் 20 ஆண்டுகளாக நிர்ணயம் செய்ய வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.1.50 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai