சுடச்சுட

  

  காடையாம்பட்டி அருகே மலைப்பாம்பு, புள்ளி மான் மீட்பு

  By ஓமலூர்  |   Published on : 20th January 2015 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓமலூர் அருகே ஊருக்குள் புகுந்த மலைப் பாம்பு, புள்ளிமானை வனத் துறையினர் மீட்டு வனப் பகுதியில் விட்டனர்.

  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வே.கொங்காரப்பட்டி, மங்காணிக்காடு பகுதியில் மலைப் பாம்பு நடமாடுவதாக டேனிஷ்பேட்டை வனச்சரகர் பாண்டுரங்கனுக்கு பொதுமக்கள் திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வனவர்கள் பழனிவேல், ராஜேந்திரன், வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மங்காணிக்காடு ஓடையில் பகுதியில் இருந்த 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பை மீட்டு டேனிஷ்பேட்டை அருகேயுள்ள உள்கோம்பை வனப் பகுதியில் விட்டனர்.

  இதேபோன்று, காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சாகுல்பாஷா (47) என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர். சுமார் 2 வயதுடைய அந்த பெண் புள்ளி மான் லோக்கூர் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai