சுடச்சுட

    

    கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆட்சியரிடம் தும்மங்குறிச்சி மக்கள் காலிக் குடங்களுடன் முறையிட்டனர்.

    நாமக்கல் நகராட்சி 7-ஆவது வார்டு தும்மங்குறிச்சியை சேர்ந்த மக்கள், காலிகுடங்களுடன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் அளித்த மனு விவரம்:

    தும்மங்குறிச்சி ஊராட்சியாக இருந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இங்கு 250 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர். இக்குடும்பங்களுக்கு அங்குள்ள 4 ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் ஆழ்குழாய்க் கிணறுகள் வரண்டு விட்டன.

    இதனால், நகராட்சி நிர்வாகம் லாரி மூலம் 5 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் செய்கிறது. இந்தத் தண்ணீர் சில மணி நேரத் தேவைக்குக் கூடப் போதுமானதாக இல்லை. தண்ணீர் எடுக்க கருப்பட்டிபாளையம், பெரியூர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 2 கி.மீ தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு மினி ஆட்டோ டேங்க் ஒன்றுக்கு ரூ.400 கொடுத்து தண்ணீரை வாங்கிப் பயன்படுத்தினோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மிக அருகாமையில் இருக்கும் தும்மங்குறிச்சி பகுதிக்கு, ஊராட்சியாக இருக்கும் வரை குடிநீர் விநியோகம் முறையாக இருந்தது. நகராட்சியோடு இணைக்கப்பட்ட பிறகு கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    கடும் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் எங்களுக்கு நகரப் பகுதியில் வழங்குவதுபோல் ஒரு நாள் இடைவெளியில் தேவைப்படும் அளவுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய, நகராட்சி நிர்வாகத்துக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

    அடிப்படை வசதி: நாமக்கல் நகராட்சி சின்னமுதலைப்பட்டி கோழி நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருக்கின்றனர். இப்பகுதி மக்கள் சாலை, குடிநீர், தெருவிளக்குகள், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் மனு அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai