சுடச்சுட

    

    திருச்செங்கோட்டில் நடந்த 62-ஆவது மூத்தோர் தேசிய கபடிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் சர்வீசஸ் (இந்திய ராணுவக் குழு) அணியும், பெண்கள் பிரிவில் இந்திய ரயில்வே அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 62-ஆவது தேசிய மூத்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி சாம்பியன் போட்டி கடந்த 14-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன்.18) இரவு நடைபெற்றன. தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி போட்டிகளைத் தொடக்கி வைத்தார். நகர்மன்றத் தலைவர் பொன்.சரஸ்வதி, தை பொங்கல் விழாக் குழுத் தலைவர் நடராஜன், திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ரங்கசாமி, செயலர் ரவி, ஒருங்கிணைப்புச் செயலர் பரந்தாமன் உள்ளிட்டோர்

    பங்கேற்றனர்.

    ஆண்கள் இறுதிப் போட்டியில், சர்வீசஸ் அணி 34-16 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா அணியையும் பெண்கள் பிரிவில் இந்திய ரயில்வே அணி 28-15 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா அணியையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றன.

    சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு தை பொங்கல் விழாக் குழுவினர் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai