சுடச்சுட

    

    சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

    By குமாரபாளையம்  |   Published on : 20th January 2015 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் நகராட்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் பங்கேற்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.

    குமாரபாளையம் காவல் நிலையம், எடப்பாடி சாலை, சேலம் சாலை வழியே செல்லும் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. செல்லிடப்பேசியில் பேசியபடியும், குடிபோதையிலும் வாகனங்களை ஓட்டக் கூடாது, அதிக வேகத்தில் செல்வதைத் தவிர்க்க வேண்டும், சாலைவிதிகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என பிரசாரத்தில் வலியறுத்தப்பட்டது.

    ரோட்டரி சங்க நிர்வாகிகள் கர்ணன், குமரேசன், நாகராஜ், லோகநாதன், சோமசுந்தரம், சந்திரன், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா கார் ஓட்டுநர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai