சுடச்சுட

  

  சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வால் விபத்துகள் குறைகின்றன

  By நாமக்கல்,  |   Published on : 20th January 2015 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாலை விதிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

  சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியம், பேச்சு, கட்டுரை மற்றும் விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டிகள் நடந்தன.

  வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ், நகர்மன்றத் தலைவர் இரா.கரிகாலன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் துரைசாமி, கருப்பண்ணன் முன்னிலை வகித்தனர்.

  அமைச்சர் பி.தங்கமணி, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசியது:

  இந்தியாவில் ஆண்டு தோறும் சாலை விபத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். 26-ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு, நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  கடந்த 2013-ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில், நடந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 438. அதில் 468 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் கொடுங்காயம் அடைந்தவர்கள், 1,518 பேர். சாதாரண காயம் அடைந்தவர்கள், 2,053 பேர். கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகள் 418. அதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 451. கொடுங்காயம் அடைந்தவர்கள் 1,691 பேர். சாதாரணக் காயம் அடைந்தவர்கள் 2,133 பேர்.

  2013-ஆம் ஆண்டைக் காட்டிலும், கடந்த ஆண்டு சாலை விபத்துகளின் எண்ணிக்கை 20-ம், பலி எண்ணிக்கை 17-ம் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வே. சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி விபத்துகளைத் தவிர்க்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

  மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தாமோதரன், பிரதீபா, சண்முக ஆனந்த், கதிர்வேல், சரவணன், ரெங்கநாதன், நித்யா, செல்வதீபா, ஜோதிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai