சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே மீன் பிடிக்கச் சென்றபோது டெட்டனேட்டர் வெடித்ததில் ஒருவரின் கை துண்டானது. மற்றொருவர்

    காயமடைந்தார்.

    பரமத்திவேலூர் எல்லைமேடு அருகே கூடுதுறை குப்புசாமி மகன் குணசேகரன் (36). இவர் சின்னகரசபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், மணி ஆகியோருடன் கூடுதுறை காவிரியாற்றில் திங்கள்

    கிழமை மீன் பிடிக்கச் சென்றுள்ளார். கூடுதுறை ராஜவாய்க்காலில் இருந்து உபரிநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கதவு அருகே டெட்டனேட்டரைப் போட இவர்கள் முயற்சி செய்தனர்.

    அப்போது, டெட்டனேட்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில், குணசேகரனின் வலது கை துண்டானது. அவரது கால், தொடைப் பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த மற்ற இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அருகே இருந்தவர்கள் குணசேகரனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குணசேகரனுடன் வந்த சின்னகரசபாளையம் கிருஷ்ணன் (60) காயங்களுடன் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.

    பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து கிருஷ்ணன், மணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai