சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் திருச்செங்கோட்டில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை ஒட்டி தலைக் கவச விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடந்தது.

    வாலரைகேட் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்தபடி சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி திருச்செங்கோடு பாவடி அருகே முடிவடைந்தது. டிஎஸ்பி ராமசாமி, ஆய்வாளர்கள் ராஜு, லட்சுமணக்குமார் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.

    பரமத்திவேலூர் பேருந்து நிலையம் முன் தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai