சுடச்சுட

    

    தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்

    By ராசிபுரம்  |   Published on : 20th January 2015 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலவாரிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் குருசாமிபாளையம் பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடந்தது.

    குருசாமிபாளையம் பகுதியில் மாவட்டத் தொழிலாளர் நல அலுவலகம் சார்பில் நடந்த முகாமில் மாவட்டத் தொழிலாளர் நல அலுவலர் சி.மஞ்சள்நாதன், உதவி கணக்கு அலுவலர் ஜி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்று தொழிலாளர்களின் மனுக்களை பெற்று, பதிவு செய்தனர்.

    இம் முகாமில் ராசிபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட கட்டுமான மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்தல், பதிவு புதுப்பித்தல் செய்து கொண்டனர். வாரிய உதவித் தொகை கோரி விண்ணப்பம் வழங்கினர்.

    முகாமில் 986 பேர் பங்கேற்றனர். இதில் 665 பேர் தங்களது பதிவைப் புதுப்பித்தும், 150 பேர் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, இயற்கை மரண நிதி உதவித் தொகை கேட்டு விண்ணப்பம் வழங்கினர்.

    171 பேர் புதியதாக தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டனர். இதில் 107 தொழிலாளர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

    ராசிபுரத்தில்: ராசிபுரத்தில் வரும் ஜன. 29-இல் உறுப்பினர் பதிவு முகாம் நடைபெறும் என மாவட்டத் தொழிலாளர் அலுவலர் சி.மஞ்சள்நாதன் குறிப்பிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai