சுடச்சுட

    

    "பணியாளர்களின் எண்ணங்களை அதிகாரி அறிந்திருக்க வேண்டும்

    By 'நாமக்கல்,  |   Published on : 20th January 2015 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணியாளர்களின் எண்ணங்களை அறிந்தவராக துறை அதிகாரி இருக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாக சீர் திருத்தத் துறை சார்பில் அரசுத் துறைகளைச் சேர்ந்த மாவட்ட அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் மற்றும் வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது.

    முகாமைத் தொடங்கி வைத்து ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது: அரசு அலுவலர் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. பணியாளர்கள் அலுவலக நிர்வாகத்தில் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ளவும், துறை சார்ந்த அலுவலக நடைமுறைகளைத் திறம்படத் தெரிந்து கொள்ளவும் இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    உயர் பொறுப்புகளிலிருக்கும் துறை சார்ந்த அலுவலர்கள் அவர்களின் கீழ் பணியாற்றக் கூடிய பணியாளர்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்வதோடு, அவர்களின் குடும்பச் சூழல் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள முன்வர வேண்டும். பணியாளர்கள் மீது ஏதேனும் புகார் வரும்பட்சத்தில், முழுமையாக விசாரித்து காலதாமதப்படுத்தாமல் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    வரும் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நாமக்கல் அரசு அலுவலகங்களைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வுநிலை உதவியாளர்களுக்கு அலுவலக நடைமுறை குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    பணியாளர் மற்றும் நிர்வாக சீர் திருத்தத் துறை ஆய்வு அலுவலர் சோமசுந்தரம், துணை ஆய்வு அலுவலர் ஷபி உன்னிசா, ஆய்வுக்குழு அலுவலர்கள் ராஜகோபால், கலியமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தலைமை அலுவலர்கள் முகாமில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai