Enable Javscript for better performance
பரமத்தியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

    By பரமத்திவேலூர்  |   Published on : 20th January 2015 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாவட்ட நூலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்கத் துணைத் தலைவர் முத்துரங்கன் தலைமை தாங்கினார். இணைச் செயலர் ராமசாமி முன்னிலை வகித்தார்.

    ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியர் இறக்கும் நிலையில் அரசுப் பணியாளர்கள் போல ரூ.1.50 லட்சம். ஓய்வூதியத்தில் ஒப்படைப்புத் தொகை பிடிப்புக் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். மூத்த குடிமகன்களாகிய ஓய்வூதியர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 50 சத கட்டணச் சலுகை வழங்க வேண்டும்.

    ஓய்வூதியர் இறக்கும் நிலையில் அந்த மாதத்தின் ஓய்வூதியத்தை முழுமையாக வாரிசுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை பொருளர் அர்த்தனாரி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai