சுடச்சுட

    

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 109 பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் பல்வேறு உதவித் தொகைகள், புதிய குடும்ப அட்டைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 444 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடித் தீர்வு கண்டு, பயனாளிகளுக்கு உரிய நலத்திட்ட உதவிகள் கிடைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

    திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 50 நபர்களுக்கும். ராசிபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 29 நபர்களுக்கும் பரமத்திவேலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 30 நபர்களுக்கும் ஆக மொத்தம் 109 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் வே.இரா.சுப்புலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.என்.பாலசுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) த.சபாபதி, தனித் துணை ஆட்சியர் (சிறப்புத் திட்டங்கள்) எஸ்.சூரியபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai