சுடச்சுட

  

  உதவித் தொகையை மாற்றுத் திறனாளிகள்  நலத்துறை மூலம் வழங்க கோரிக்கை

  By  நாமக்கல்,  |   Published on : 21st January 2015 01:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மட்டுமே உதவித் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
   தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கும், 75 சதவீதத்துக்கு மேல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் 40 சதவீதம் பாதிக்கப்பட்ட தொழு நோயாளிகளுக்கும் வழங்கி வருகிறது.
   60 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் உதவித் தொகை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்குக் கிடைப்பதில்லை.
   மாற்றுத் திறனாளியின் துன்பம், வேதனை எல்லாம், மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை செய்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
   இதனால் தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்க வேண்டும்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai