சுடச்சுட

  

  ஒசக்கோட்டை சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

  By  நாமக்கல்,  |   Published on : 21st January 2015 01:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒசக்கோட்டை சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
   ஒசக்கோட்டையில் தேவாங்கர் சமூக மக்களின் குல தெய்வமான செüடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் தொட்டு அப்ப திருவிழா நடைபெறும்.
   இத்திருவிழா கடந்த 18-ஆம் தேதி இரவு விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. 19-ஆம் தேதி காலை மகாசண்டி ஹோமம் நடைபெற்றது. பூஜையை ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், இளவேணி ராஜேந்திரன் தொடங்கி வைத்தனர்.
   தொடர்ந்து கணபதி பூஜை, கலச ஆவாஹனம் ஹோமங்கள், அம்மனுக்கு பண்டாரம் கட்டுதல், விநாயகர், காயத்ரி தீர்த்தாபிஷேக விழா நடைபெற்றது.
   செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு கணபதி, செüடேஸ்வரி, வேதமாதா காயத்ரி மற்றும் ஜயாதி ஹோமம் நடைபெற்று மகாபூர்ணாஹுதி நிறைவு பெற்று தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தயானந்தபுரி சுவாமிகள், வலம்புரி விநாயகர், காயத்ரி மூர்த்திகளுக்கு தீர்த்தாபிஷேகம், சர்வ அலங்கார தீபாராதனை, செüடேஸ்வரி அம்மன், சக்திவேல் முருகனுக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
   காலை 8 மணிக்கு கோமாதா பூஜை, 8.30 மணிக்கு அம்மனுக்கு மாங்கல்யதாரணம், 8.50 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு சக்தி அழைப்பு, பகல் 12 மணிக்கு அன்னதானம், பகல் 1 மணிக்கு சாமுண்டி அழைப்பு, மாலை, 6.15 மணிக்கு மகாஜோதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
   விழாவை முன்னிட்டு கோலாட்டம், சிலம்பாட்டம், இளைஞர்கள் கத்தி போடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai