சுடச்சுட

  

  ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சிக்குள்பட்ட குச்சிக்காட்டில் பொதுமக்கள் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இளந்தென்றல் பூங்கா திறப்பு விழா அண்மையில் நடந்தது.
   முன்னாள் மத்திய இணை அமைச்சரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலருமான எஸ்.காந்திசெல்வன் பூங்காவை திறந்து வைத்து, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்தார். ஒன்றியச் செயலர் கே.பி.ஜெகநாதன் தலைமை வகித்தார். பேரூர் செயலர் பொன்.நல்லதம்பி முன்னிலை வகித்தார்.
   மாவட்டப் பொருளர் எஸ்.பி.கே.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன், மாவட்டப் பிரதிநிதிகள் பாலமுருகன், குணசேகரன், சரவணன், ஒன்றியத் துணைச் செயலர் இரா.சிவகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் பி.ஜி.ரவி, விஜயா, சின்னுசாமி, ஒன்றியப் பொருளர் ரவி (எ) முத்து செல்வன் அவைத் தலைவர் காசி முத்துசாமி, துணைச்செயலர் அருளரசன், ஊராட்சித் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai