சுடச்சுட

    

    குடிநீர் விநியோகத்தில் முறைகேடு: லாரியை சிறை பிடித்துப் போராட்டம்

    By  நாமக்கல்  |   Published on : 21st January 2015 01:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நகராட்சி லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்காமல் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவரின் வீட்டிற்குக் கொண்டு சென்றதாகக் கூறி குடிநீர் லாரியை சிறைப் பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட 7-ஆவது வார்டு தும்மங்குறிச்சி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், தினமும் குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கையில்லை. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
     இந்நிலையில் நகராட்சி குடிநீர் லாரி மூலம் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு செவ்வாய்க்கிழமை காலை குடிநீர் நிரப்பப்பட்டதாம். மீதமுள்ள குடிநீரை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர் தனது வீட்டுக்கும், உறவினர் வீடுகளில் உள்ள தொட்டிகளுக்கும் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
     பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய குடிநீரைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி குடிநீர் லாரியைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     அங்கு வந்த நல்லிபாளையம் போலீஸார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து 2 மணி நேரம் நடத்திய போராட்டத்தை பொதுமக்கள் விலக்கிக் கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai