சுடச்சுட

    

    சாய் வாங்டோ போட்டியில்  காமராஜர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

    By  நாமக்கல்,  |   Published on : 21st January 2015 01:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான சாய் வாங்டோ விளையாட்டுப் போட்டியில் நாமக்கல் காமராஜர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
     சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் தேசிய அளவிலான 19 வயதுக்கு உள்பட்டோருக்கான சாய் வாங்டோ போட்டிகளை தேசிய பள்ளி விளையாட்டு சம்மேளனம் அண்மையில் நடத்தியது.
     இப்போட்டியில் தமிழக அணி ஆண்கள் பிரிவில் தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக இரண்டாமிடம் பெற்றது. இப்போட்டிகளில் காமராஜர் பள்ளி மாணவர்கள் ஸ்ரீபிரதான் மற்றும் நவீன்குமார் ஆகியோர் தங்கப்பதக்கமும் ஆகாஷ் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி வெள்ளிப் பதக்கம், வளர்மதி வெண்கலப் பதக்கம் வென்றனர்.
     வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை காமராஜர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.நல்லதம்பி மற்றும் மாவட்ட உடல்கல்வி ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai