சுடச்சுட

    

    செய்முறைத் தேர்வில் முறைகேடு  புகார் தெரிவித்த  ஆய்வக உதவியாளர் பணியிடைநீக்கம்

    By  நாமக்கல்,  |   Published on : 21st January 2015 01:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொல்லிமலை அரசுப் பள்ளியில், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் முறைகேடு நடப்பதாக ஆட்சியரிடம் புகார் அளித்த ஆய்வக உதவியாளர் செவ்வாய்க்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
     நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஜி.டி.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆய்வக உதவியாளர் சரவணன், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 12-ஆம் தேதி புகார் மனு அளித்தார்.
     அதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்த ஆண்டு செய்முறைத் தேர்வு குறித்து எந்தப் பயிற்சியும் அளிக்கவில்லை. தேர்வின் போது மாணவர்களிடம் தலா ரூ.100 முதல் ரூ.500 வரை வசூல் செய்யப்பட்டு, செய்முறைத் தேர்வு எழுதினாலும், எழுதாவிட்டாலும் மதிப்பெண் அளிக்கப்படுகிறது. இதனால் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். உள்நோக்கத்துடன் சரவணன் பொய்ப் புகார் அளித்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து சரவணனை பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குணசேகரன் உத்தரவிட்டார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai