Enable Javscript for better performance
டெட்டனேட்டர் விற்பனை  செய்தவர்கள் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    டெட்டனேட்டர் விற்பனை  செய்தவர்கள் மீது வழக்கு

    By  பரமத்திவேலூர்,  |   Published on : 21st January 2015 01:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் அருகே டெட்டனேட்டர் வெடித்து இருவர் காயமடைந்தது தொடர்பாக டெட்டனேட்டர் விற்பனை செய்த இருவர் மீது பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     பரமத்திவேலூர் கூடுதுறையைச் சேர்ந்த குப்புசாமி மகன் குணசேகரன் (36). சின்னகரசபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், மணி ஆகியோருடன் கூடுதுறை காவிரியாற்றில் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றார். அப்போது மீன் பிடிப்பதற்காக உபயோகித்த டெட்டனேட்டர் வெடித்ததில் குணசேகரனின் வலது கை துண்டானது. அவருடன் சென்ற கிருஷ்ணனும் படுகாயமடைந்தார். உடனிருந்த மணி, கிருஷ்ணனை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாராம். மயங்கிக்கிடந்த குணசேகரன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணியை கைது செய்து விசாரணை நடத்தினர். அனுமதியின்றி டெட்டனேட்டர் விற்பனை செய்த வெங்கரை செல்வம், கபிலர்மலை ரவி ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai