Enable Javscript for better performance
தேன்கூடுகளை அகற்றக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கபிலர்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீதுள்ள தேன்கூடுகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     இக்கோயிலில் தைப் பூசத் திருவிழாவின் போது நாமக்கல், ஈரோடு, திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள்.
     கோயில் அமைந்துள்ள மலைப் பகுதியில் ஏராளமான தேனீக்கள் அதிக அளவில் கூடுகட்டியுள்ளன.
     விழாக் காலங்களில் காவடியாட்டத்துடன் வரும் பக்தர்கள் வான வேடிக்கை நிகழ்ச்சியை நடத்தும்போது தேனீக்கள் பக்தர்களைக் கொட்டியதாகக் கூறப்படுகிறது.
     இத் தேன்கூடுகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து தீயணைப்புத் துறையினர் கபிலர்மலைக்கு வந்து தேன்கூடுகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai