சுடச்சுட

    

    தை அமாவாசை: நாமக்கல்  ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்புப் பூஜை

    By  நாமக்கல்,  |   Published on : 21st January 2015 01:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தை அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்புப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் தை அமாவாசை பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
     இதனையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், தயிர், வெண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
     இந்தப் பூஜையில் நாமக்கல் மட்டுமின்றி சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai