Enable Javscript for better performance
முட்டைக் கோழிகளுக்குத் தீவன  அளவைக் குறைக்கக் கூடாது- Dinamani

சுடச்சுட

    

    முட்டைக் கோழிகளுக்குத் தீவன  அளவைக் குறைக்கக் கூடாது

    By  நாமக்கல்,  |   Published on : 21st January 2015 01:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முட்டைக் கோழிகளுக்குத் தீவன அளவைக் குறைக்கக் கூடாது என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     நாமக்கல் கால்நடை அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடுத்த மூன்று நாள்களுக்கு வானம் தெளிவாகவும். மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் சற்றுக் குறைவாக இருக்க வாய்ப்புள்ளதால், கோழிகளின் தீவன எடுப்பு இயல்பான 110 கிராம் என்ற அளவிலிருந்து 5 முதல் 8 கிராம் கூடுதலாக இருக்கும்.
     தீவனத்தைக் கட்டுப்படுத்துவதோ அல்லது இயல்பான அளவில் கொடுப்பதோ, முட்டை உற்பத்தியைக் குறைத்துவிடும். தீவனத்தைக் கட்டுப்படுத்தும் உத்தியாக தீவனத்தில் எரிசக்தியின் அளவை 50 முதல் 100 கிலோ கலோரி அளவுக்கு உயர்த்தித்தர வேண்டும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai