சுடச்சுட

    

    ராசிபுரத்தில்  சாலைப் பாதுகாப்பு வாரவிழா பேரணி

    By  ராசிபுரம்,  |   Published on : 21st January 2015 01:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் ஆண்டகளூர் கேட் பகுதியில் சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடந்தது.
     ஆண்டகளூர்கேட் முன் துவங்கிய பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
     சாலைப் பாதுகாப்புக் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கியும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஸ்டிக்கர்களையும் செந்தில்குமார் ஒட்டினார்.
     ஆண்டகளூர் கேட்டில் இருந்து ராசிபுரம், நாமக்கல் சாலை, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம், கோனேரிப்பட்டி வழியாகப் பேரணி சென்றது.
     ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடைபெற்ற வாகன ஒட்டுனர்களுக்கான கண் பரிசோதனை முகாமில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று தனியார் வாகன ஒட்டுநர்கள், பள்ளி, கல்லூரி வாகன ஒட்டுநர்களுக்கு கண் பார்வை குறித்த பரிசோதனை மேற்கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai