சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே சீராப்பள்ளியில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் கத்தி போடும் விழா நடந்தது.
     இக்கோயிலில் தை மாதத் திருவிழா ஜன.15-ல் தொடங்கியது. சக்தி அழைக்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் திருவிளக்கு பூஜை, தளிகை பூஜை, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஞாயிற்றுக்கிழமை சாமுண்டி அழைப்பு, திருமஞ்சன ஊர்வலம், தொடர்ந்து மகா ஜோதி அழைப்பு நடந்தன.
     சாமுண்டி அழைப்பில் சீராப்பள்ளி, கொண்டலாம்பட்டி, ஜேடர்பாளையம், ஒடுவன்குறிச்சி பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குழந்தைகளின் பயம் நீங்க வீரமுட்டி என்ற அரக்கன் வேஷமிட்டும் வந்தனர். செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டம் நடந்தது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai