சுடச்சுட

    

    வாக்குச் சாவடிப் பணியாளர்களுக்குப் பயிற்சி

    By  நாமக்கல்,  |   Published on : 21st January 2015 01:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய வாக்காளர் தினத்தன்று வாக்குச் சாவடி களப் பணியாளர்கள் மற்றும் வாக்குச் சாவடி மைய அலுவலர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த பயிற்சி நாமக்கல் கவின்கிஷோர் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     இந்தப் பயிற்சியை கோட்டாட்சியர் கே.காளிமுத்து துவக்கிவைத்து பேசியது: வரும் 25-ஆம் தேதி வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி மையங்களையும்திறந்து வைக்க வேண்டும். அனைத்து வாக்கு நிலை அலுவலர் மற்றும் மைய அலுவலர்கள் கட்டாயம் வாக்கு மையத்தில் இருக்கவேண்டும்.
     அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கவேண்டும். 18 முதல் 19 வயதுள்ள இளம் வாக்காளர்களுக்கு பேட்ஜ் அணிவிக்க வேண்டும். இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதை ப்புகைப்படம் எடுக்க வேண்டும்.
     25-ஆம் தேதி மாலைக்குள் விநியோகம் செய்யப்படாத வாக்காளர் அடையாள அட்டைகளை, சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடு வீடாகச் சென்று 27-ஆம் தேதிக்குள் ஒப்படைத்து கையெழுத்துப் பெற்று தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.
     திருத்தங்கள் கோரி மனு அளித்தவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவை அணுகுமாறு தெரிவிக்க வேண்டும் என்றார்.
     இந்தப் பயிற்சி முகாமில் சேந்தமங்கலம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட 327 ஆசிரியர்களும், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 394 ஆசிரியர்களும் பங்கேற்றனர். இதில் வட்டாட்சியர் கதிரேசன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் விஜயராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai