Enable Javscript for better performance
விசைத்தறி உரிமையாளர்கள்  வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    விசைத்தறி உரிமையாளர்கள்  வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

    By  குமாரபாளையம்,  |   Published on : 21st January 2015 01:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்கட்டண மானியம் வழங்கக் கோரி குமாரபாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
     தமிழகமெங்கும் 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் விசைத்தறிகளுக்கு 15 சத மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வுக்கேற்ப மின்கட்டண மானியம் வழங்கக் கோரி கோவை, திருப்பூர் உள்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் கடந்த 7-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதில், திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காமல் உள்ளன. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விசைத்தறியாளர்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்தி வைப்பதாக திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குமாரபாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
     ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி அளித்த உறுதியின்பேரில் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai