சுடச்சுட

  

  ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் 30-ஆம் தேதி காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள, இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்வதுடன், விவசாயம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைத் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம். பட்டா மாறுதல், பாதைப் பிரச்னை உள்ளிட்ட அனைத்து நிலங்கள் தொடர்பான பிரச்னைகளுக்கென தனியே ஒரு கூட்டம் 28-ஆம் தேதி காலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகள் நிலம் தொடர்பான பிரச்னைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம்.
   விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பிரச்னைகளை தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai