சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை கலைப் பயணமாகச் சென்ற கபிலர்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமி கோயில் உள்ள சிற்பங்களைப் பார்வையிட்டனர்.

    கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 6-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கபிலர்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் தூண்களில் உள்ள சிற்பங்களைப் பார்வையிட்டனர். பள்ளி ஆசிரியர்கள் ஹரிஹரன், பன்னீர்செல்வம் ஆகியோர் கோயிலில் அமைந்துள்ள கபிலர், இடும்பர், ராமர், நரசிம்மர், மயில், நந்தி உள்ளிட்ட சிற்பங்கள் குறித்து மாணவ,மாணவிகளுக்கு விளக்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai